பால், தயிர், நெய், கோமூத்திரம், சாணம் சேர்ந்த கலவைக்கு பஞ்சகவ்யம் என்று பெயர். இதில் பால் 5 மடங்கும், தயிர் 3மடங்கும், நெய் 2பங்கும், கோமூத்திரம் 1பங்கும், பசுஞ்சாணம் கைபெருவிரல் அளவும் இருக்கவேண்டும். சிவபெருமானுக்கு பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்வது சிறப்பு. இதனால் முன்வினைப் பாவம் அடியோடு நீங்கும்.