பதிவு செய்த நாள்
17
ஏப்
2021
02:04
சென்னை - நாட்டில் கொரோனா வைரஸ் பரவல், மீண்டும் வேகம் எடுத்துள்ளதால், பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை உடனடியாக மூட, மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள, பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், தொல்லியல் பகுதிகள், அருங்காட்சியகங்கள், கள அருங்காட்சியகங்கள், நுாலகங்கள் என, 245 பகுதிகள், அடுத்த மாதம், 15ம் தேதி வரை மூடப்படுகின்றன. ஏற்கனவே, புகைப்படம், திரைப்படம் எடுக்கவோ, கலாசார நிகழ்ச்சிகள் நடத்தவோ அனுமதி பெற்றிருந்தாலும், அவை ரத்து செய்யப்படுவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம், டேவிட் ஏல் கல்லறை, மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர், மணிமங்கலம் தர்மேஸ்வரா கோவில்கள், மாமல்லபுரம் கடற்கரை கோவில்கள், செஞ்சிக்கோட்டை ஆகியவை மூடப்படுகின்றன.