திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2021 10:04
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாளில் இரவு மகிழ மரத்தை சுற்றி வந்து உண்ணாமலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் சிறப்பு பெற்றதாகும். இவ்விழாவானது சம்மந்த வினாயகர் சன்னதி அருகே பந்தக்கால் முகூர்த்தத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவத்தில், மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறும். விழாவின் முதல் நாளில் இரவு மகிழ மரத்தை சுற்றி வந்து உண்ணாமலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.