பதிவு செய்த நாள்
19
ஏப்
2021
10:04
மயிலாடுதுறை : சீர்காழி கோயிலில் திருஞான சம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கும் திருமுலைப்பால் விழா தருமபுரம் ஆதீன குருமகாசன்னிதானம் முன்னிலையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை, சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி பிரம்ம புரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர் என லிங்கம், குரு, சங்கமம் என்று மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் தோன்றிய ஞா ன சம்பந்தருக்கு, பார்வதிதேவி, சிவபெருமானுடன் காட்சிக் கொடுத்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினார். இதனால் ஞானம் பெற்ற திருதிருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் முதல் தேவாரப் பதிகமான தோடுடைய செவியன் என்ற பதிகத்தைப் பாடினார். இந்நிகழ்ச்சி ஆண்டு தோறும் சித்திரை மாதம் இக்கோயிலில் திருமுலைப்பால் விழாவாக நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு திருமுலைப்பால் விழா நேற்று நடைபெற்றது. காலை 11:30 மணிக்கு சன்னதியில் இருந்து ஓதுவார்கள் தேவாரம் இசைக்க, மங்கள வாத்தியங்க ள் முழங்க பல்லக்கில் திருதிருஞானசம்பந்தர் பிரம்ம தீர்த்தக்கரையில் எழுந்தருளினார், தொடர்ந்து உமையம்மை அங்கு எழுந்தருளி தங்கக் கின்னத்தில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி தருமபுரம் ஆதீன குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருஞானசம்பந்த பெருமானுக்கு காட்சிகொடுக்க, மூவருக்கும் மகா தீபாராதணை நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது குழந்தைகள் ஞானம் பெற வே ண்டி பழம், சக்கரை கலந்த பாலை சுவாமி, அம்பாளுக்கு படைத்து தரிசனம் செய்தனர். இவ்விழாவில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றபடாமல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டது அதி;ச்சியை ஏற்படுத்தியது.