பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமிநாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றதுடன் துவங்கியது. இதில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டது. சிறப்பு பூஜைகள், அலங்காரம் தீபாரதனை செய்யப்பட்டது. கோயில் துணை ஆணையர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஏப்.,24 ல் திருக்கல்யாணம் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும். சித்ரா பவுர்ணமி (ஏப்.26)ல் நடைபெற உள்ள திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு சுவாமி சப்பரத்தில் கோயில் வளாகத்தை வலம் வரும். மேலும் அன்று திருஆவினன்குடி கோயிலில் பால்குட அபிஷேகமும், பெரியநாயகி அம்மன் கோயிலில் வெள்ளிரதமும் ரத்து செய்யப்படுகிறது. அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறி முறைப்படி திருவிழா உற்சவங்கள் ஆகம் விதிப்படி நடைபெறும். பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக விலகலை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.