ரிஷிவந்தியம் : வாணாபுரம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த வாணாபுரம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த 17 ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேகம் விழா தொடங்கியது.தொடர்ந்து, புண்யாகவாசனம், வாஸ்து பூஜை, ப்ரவேசபலி, யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடந்ததை தொடர்ந்து, கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.