திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் நேற்று ராமானுஜர் ஜெயந்தியை முன்னிட்டு ராமானுஜருக்கு மங்களாசாசனம் அளிக்கப்பட்டது.
இக்கோயிலில் பிரமோற்ஸவம் கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் இன்றி, சம்பிரதாயம் மற்றும் வைகானாச ஆகம விதிகளின் படி நடைபெற்று வருகிறது. ராமானுஜர் ஜெயந்தியை முன்னிட்டு சன்னதியிலிருந்து ராமானுஜர் அலங்காரத்துடன் புறப்பாடாகி பள்ளியறை எழுந்தருளினார். பெருமாள் மங்களாசாசனம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து தாயார், ஆண்டாள் சன்னதிகளில் ராமானுஜர் எழுந்தருளி மங்களாசாசனம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சன்னதிக்கு எழுந்தருளிய ராமானுஜருக்கு தீர்த்தம்,பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் பிரமோற்ஸவ இரண்டாம் திருநாளை முன்னிட்டு தென்னமரத்து வீதி பிரகாரம் வலம் வந்த பெருமாளை எதிர் சேவையாக ராமனுஜர் எழுந்தருளினார்.