கோதண்டராமர் கோயில் உற்சவம் ரத்து ராம நவமி விழா உண்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2021 04:04
தேவகோட்டை : தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயில் பிரமோற்சவம் ராம நவமியையொட்டி. 10 தினங்கள் நடைபெறும். திருகல்யாணம், தேரோட்டம் நிகழ்ச்சிகள் நடப்பது வாடிக்கை. கொரோனா காரணமாக அரசு திருவிழாவிற்கு தடை செய்துள்ளது. இதன் காரணமாக இவ்வாண்டு பிரமோற்சவம் உற்சவத்தை கோயில் நிர்வாகம் ரத்து செய்து உள்ளது. அதே சமயம் வரும் 21 ம் தேதி ராமநவமியை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜை நடக்கிறது. மாலை சுவாமி அம்பாள் உட்பட அனைத்து பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளி அங்கி அணிவித்து சிறப்புப் பூஜைகள் நடக்கிறது. பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும்.