பதிவு செய்த நாள்
20
ஏப்
2021
04:04
போத்தனூர்: குறிச்சி காந்திஜி ரோட்டில் பழமையான குண்டத்து மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைப்புடன், கன்னிமூல கணபதி, சப்தகன்னிமார், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் மற்றும் கருப்பண்ணசாமி சன்னதிகள் புதியதாக அமைக்கப்பட்டன.
இவற்றின் கும்பாபிஷேக விழா, 16 காலை அனுக்ஞை விக்னேஸ்வர் பூஜை, பஞ்சகவ்ய பூஜை, புன்யாக வாசனம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவைகளுடன் துவங்கியது. மாலை, வாஸ்துசாந்தி. பூத சுத்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜையும் தொடர்ந்து, மகா தீபாராதனை, பிரசாதம் விநியோகம் நடந்தன. மறுநாள் விமான கலச ஸ்தாபிதம், பூர்ணாஹூதி, எந்திர ஸ்தாபனம். அஷ்டபந்தனம் சாத்துதல், தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும் நடந்தன. நிறைவு நாளான, 18ல் பிம்ப சுத்தி, நாடி சந்தானம், யாத்ரா தானமும், காலை, 8:15 மணிக்கு விமானம் மற்றும் மூல ஆலய கும்பாபிஷேகமும் நடந்தன. இதையடுத்து மகா அபிஷேக அலங்காரம், தச தரிசனம், கோ பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும் அன்னதானமும் நடந்தன. நேற்று முதல். மண்டல பூஜை துவங்கியது. ஏற்பாடுகளை, குறிச்சி அனைத்து சமூக பெரிய தனக்காரர்கள் செய்திருந்தனர்.