இன்று மக்கள் பணியாற்ற ஆயிரமாயிரம் தலைவர்கள் நாட்டில் உருவாகியுள்ளனர். ஆனால் உண்மையிலேயே அவர்களிடம் சேவை மனப்பான்மை உள்ளதா? இல்லையே! சிலர் மற்றவர்களை மட்டம் தட்ட விரும்புகின்றனர். சிலர் தற்பெருமையுடன் தன்னையே புகழ்ந்து பேசுகின்றனர். சிலர் வார்த்தை என்னும் அம்புகளால் மற்றவரைத் தாக்குகின்றனர். அதிகார பலத்தால் சிலர் ஆவணத்துடன் அலைகின்றனர். ‘‘ஏழை மக்களுக்காகப் பணி செய்வேன்’ என கொடுத்த உறுதிமொழியை மறந்து விட்டு பல தலைமுறைக்கும் தேவையான செல்வத்தைக் குவிக்கின்றனர். ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இருப்பது அவசியம். இல்லாவிட்டால் பதவியில் இருக்கும்போது வேண்டுமானால் மகிழ்ச்சி இருக்கும். வாழ்வு முடிந்த பின் சொர்க்கத்தில் இடம் கிடைக்காது. துன்பத்தில் தத்தளிக்க நரக வாசல் திறக்கப்பட்டிருக்கும். ‘‘எந்த மக்கள் தலைவன் சேவை செய்யாமல் மோசடியில் ஈடுபடுகிறானோ அவன் சுவர்க்கம் நுழைய மாட்டான்’’ என்கிறார் நாயகம்