பரமக்குடி: பரமக்குடி கிழக்குப்பகுதி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் 28ஆம் ஆண்டு ராமநவமி விழாவையொட்டி ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. காலை 6:00 மணி தொடங்கி மூலவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 9:00 மணி முதல் உலக நன்மைக்காக லட்சார்ச்சனை விழா ஆரம்பமானது. அப்போது மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு அர்ச்சனை நடத்தப்பட்டது. இக்கோயிலில் நேற்று முன்தினம் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தப்பட்டது.
*சோமநாதபுரம் செல்வவிநாயகர் கோயிலில் 17 ஆம் ஆண்டு ராமநவமி விழாவில் காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமம் தொடங்கி, பூர்ணாகுதி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
*எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது.
*பரமக்குடி அனுமார் கோதண்டராமர் சுவாமி கோயிலில் புத்திர காமேஷ்டி விழாவையொட்டி பாயாசம் பிரசாதம் வழங்கப்பட்டது.
*பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆஞ்சநேயர் சன்னதி, காக்கா தோப்பு வீர ஹனுமான் மற்றும் பால ஹனுமான் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அனைத்துக் கோயில்களிலும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.