ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இணை ஆணையர் தனபால் முன்னிலையில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி, பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புறமுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கையை கோயில் ஊழியர்கள் சேகரித்தனர்.ரொக்கப் பணம் ரூ.1 கோடியே 16 ஆயிரத்து 475, தங்கம் 145 கிராம், வெள்ளி 1 கிலோ 931 கிராம் காணிக்கையாக கிடைத்தது.