தேவகோட்டை: கோதண்டராமஸ்வாமி கோயிலில் ராமநவமி மை முன்னிட்டு காலையில் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது.
மாலை கோயிலில் உள்ள மூலவர்கள் கோதண்டராமர், சீதை லட்சுமணர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், உட்பட பரிவார மூர்த்திகளுக்கு திருமஞ்சனத்தை தொடர்ந்து வெள்ளி அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தன. உற்சவர்கள் ராமர், சீதை, லட்சுமணர் பட்டாபிஷேகம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ராமநவமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து சுவாமிகளை தரிசனம் செய்தனர். ராமநவமியை தொடர்ந்து வழக்கமாக நடைபெறும் 10 நாள் பிரமோற்சவம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.