செஞ்சி; வேட்டவலம் அக்னி மாரியம்மன் கோவிலில் பெண்கள் யாகசாலை வேள்வி நடத்தி மகா கும்பாபிஷேக விழாவை நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் நேற்று அக்னி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மங்கள இசையுடன் யாக சாலை பூஜை துவங்கியது. இதில் இரண்டு கால யாகசாலை வேள்வி பூஜைகள் நடந்தன. இதில் பெண்கள் மந்திரங்கள் ஓதி வேள்வி நடத்தினர்.நேற்று காலை 9 மணிக்கு யாகசாலை வழிபாடு நிறைவடைந்து 9.10 மணிக்கு திருக்குடங்கள் புறப்பட்டு 9.15 மணிக்கு கோபுர கலசங்களுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.