* மனச்சாட்சியை மதியுங்கள். இதுவே நிஜமான தெய்வம். * உலகம் சிறந்த பல்கலைக்கழகம். இங்கு பெறும் அனுபவமே நல்ல ஆசிரியர்கள். * உண்பதற்காக யாரும் வாழக் கூடாது. உயிர் வாழ்வதற்காக மட்டும் உண்ணுங்கள். * சத்தியத்தை விட சிறந்த காவலர் இல்லை. அது தீமையிலிருந்து காப்பாற்றும். * உதவி செய்தவருக்கு நன்றிக்கடனாக நாமும் உதவ வேண்டும். * ஆசைக்கு வரம்பு வைத்துக் கொள்ளுங்கள். வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும். * உழைத்தால் மட்டுமே உணவு உடம்பில் ஒட்டும். * உடல் என்னும் இயந்திரத்திற்கு உணவு என்னும் எண்ணெய் அளவுடன் இருக்க வேண்டும். * ருசிக்காக அலையாதீர். எளிதில் செரிக்கும் உணவுகளை உண்ணுங்கள். * உண்மையின் பாதைக்கு திரும்பினால் உலகில் தர்மம் நிலைக்கும். * பசியுடன் விரதமிருப்பதை விட, ஏழைக்கு உணவளிப்பது மேல். * சொல்வது எளிது. சொல்லியபடி நடப்பது கடினம். * ஆயிரம் அறிவுரைகளை விட பயனுள்ள ஒரு செயல் மேலானது. * காரணமின்றி கடவுள் எதையும் படைப்பதில்லை. உலகிலுள்ள அனைத்தும் மதிப்பு மிக்கவை. * இரக்கமுடன் செயல்படுவதே கல்வி கற்றதன் அடையாளம். * அன்பை விட மேலான தெய்வம் வேறி்ல்லை. * நற்குணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். * எப்போதும் நல்லதையே சிந்தியுங்கள். * கடவுளின் திருநாமத்தை பாடுங்கள். நல்லதே நடக்கும். * குறைவாகப் பேசினால் மட்டுமே மனதைக் கட்டுப்படுத்த முடியும். * இழந்த பணத்தை பெற முடியம். ஆனால் ஒழுக்கத்தைப் பெற முடியாது. * பெற்றோரின் தேவையறிந்து கொடுத்து சேவையாற்றுங்கள்.