இறைவனின் மீது ஆணையிடுவது, சத்தியம் செய்வது, லாபத்தில் இவ்வளவு பங்கு தருவதாக ஒப்பந்தம் செய்வது என வாக்கு கொடுத்தபின் சிலர் அதை மீறி விடுவதுண்டு. இறையச்சம் இல்லாத இவர்களுக்கு அதற்கான தண்டனை கிடைக்கும். சிலர் பணத்துக்காக பெண்கள், சிறுவர்கள், தொழிலதிபர்கள், செல்வந்தர்களைக் கடத்துகிறார்கள். இந்தக் கொடுமையைச் செய்தால் அல்லாஹ்வின் அரசாங்கத்தில் கடும் தண்டனை விதிக்கப்படும். உழைப்பாளியின் உடம்பில் அரும்பிய வியர்வை காயும் முன்பே கூலியைக் கொடுக்க வேண்டும். இந்த மூன்று வகையான மனிதர்களிடமும் இறைவன் தர்க்கம் செய்வார் என்கிறார் நாயகம்.