குடும்பத்தில் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையே சண்டை, வாக்குவாதம் ஏற்படலாம். இதை வளர விடுவது நல்லதல்ல. இல்லாவிட்டால் நிரந்தர பிரிவுக்கு வழிவகுக்கும். இதனால் பெற்றோர் மனதிற்குப் பிடிக்காத மகன் அல்லது மகளைப் புறக்கணித்து விட்டு, விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும் சொத்தை உயிலாக எழுதி வைப்பதுண்டு. இப்படிப்பட்ட பெற்றோர் சொர்க்கத்தை அடைய முடியாது. பெற்ற பிள்ளைகளிடம் பாரபட்சம் இல்லாமல் சொத்து விஷயத்தில் சமமாக பகிர்ந்தளிக்க வேண்டும். பிள்ளைகளின் மீது வெறுப்பு இருந்தாலும் உரிய சொத்தைக் கொடுக்காவிட்டால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.