புதிய ஆடை அணியும் போது, ‘‘இறைவா! நன்றியனைத்தும் உனக்கே. எனக்கு இதை நீயே அணிவித்தாய். இதை அணிவதன் மூலம் நன்மை மட்டுமே கிடைக்க வேண்டுகிறேன். இதன் தீயஅம்சத்தைப் போக்கி உன் பாதுகாப்பைத் தேடுகின்றேன்’’ என நாயகம் குறிப்பிடுவார். இப்படி பொருள் என்ன தெரியுமா? ஆடையை உடுத்தியிருக்கும் போது அது மற்றவர்களின் மனதில் பொறாமையையோ, ஏக்கத்தையோ ஏற்படுத்தக் கூடாது. தனக்கு மட்டுமின்றி மற்றவருக்கும் நல்ல சிந்தனை உண்டாக வேண்டும் என்பது அவரது எண்ணம். புத்தாடை மட்டுமின்றி வீடு, வண்டி என எதை நாம் வாங்கினாலும், பயன்படுத்தினாலும் அதன் மூலம் மற்றவருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்பது இதன் நோக்கம்.