நம்மை நாமே உயர்வாக எண்ணாமல், நம்மிடம் அளவுக்கு அதிகமாக திறமை இருப்பதாக கருதாமல் சரியான அபிப்ராயம் கொள்வதே தாழ்மை என்கிறது பைபிள். மனிதனின் மனம் இயல்பாகவே தன்னை உயர்வாக கருதும் இயல்புடையது. அதன் காரணமாக அவன் தன்னிடம் உள்ள தீய தன்மைகளை மறைக்கிறான். ஆண்டவரின் முன்பு தன்னை புழுவுக்கும் கீழாக தாழ்த்திக் கொள்பவனே அவரது அன்புக்கு பாத்திரமாவான். ‘‘ வீண் தற்பெருமை கொள்ளாமல் மனத்தாழ்மையினால் ஒருவரையொருவர் மேன்மையுள்ளவர்களாக எண்ணுவீர்களாக’’ தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு, ‘அவனை விட நான் சிறந்தவன்’ என்று வாக்குவாதம் செய்ய வேண்டாம். தங்கள் குடும்பம் இன்னாருடைய குடும்பத்தை விட உயர்ந்தது என தற்பெருமை பேசுவது கூடாது. ‘‘ஆண்டவரின் பிள்ளைகளான நல்லவர்கள் இரக்கம், தயவு, மனத்தாழ்மை, சாந்தம், பொறுமை ஆகிய பண்புகளை ஏற்று ஒருவரையொருவர் தாங்கியும், மன்னித்து நடக்கும் போது உண்மை பக்தியின் வல்லமை, வசீகரம் அவர்களிடத்தில் நிலைக்கும்’’ என்கிறது பைபிள்