ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா பவுர்ணமிக்கு உண்டு. அனைத்து மாதங்களிலும் பவுர்ணமியில் முழுநிலவு அழகாகப் பிரகாசித்தாலும் அதிலுள்ள களங்கம் மிக மெலிதாகக் காணப்படும். ஆனால் சித்ராபவுர்ணமியன்று நிலவு தன் முழு கிரணங்களையும் பொழிந்து களங்கம் இன்றி பூரணமாக திகழும். இதனால் சித்ரா பவுர்ணமி சிறப்பானதாகும். பிலவ தமிழ்ப்புத்தாண்டின் முதல் ழுழுநிலவு என்பதும் குறிப்பிடத்தக்கது.