பதிவு செய்த நாள்
30
ஏப்
2021
01:04
மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவில், நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, வைத்தீஸ்வரன் கோவிலில், தருமபுரம் ஆதீனத்தின் நிர்வாகத்தின் கீழ், தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.பழமை வாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து, 23 ஆண்டுகளுக்குப் பின், நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க, பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமையில், நுாற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளை பின்பற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனால், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.