விக்கிரவாண்டி: ஆர்.சி.மேலக்கொந்தை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த ஆர்.சி., மேலக்கொந்தையில் முத்துமாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. இதற்கான பூஜை கடந்த 28 ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது.நேற்று காலை யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி முடிந்து, கடம் புறப்பாடாகி காலை 10;10 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடைபெற்றது. கும்பாபிேஷகத்தை சந்திரசேகர குருக்களும், பூஜை மற்றும் அபிேஷகங்களை திருவதிகை சீனுவாச சிவாச்சாரியார் செய்தனர்.