மாரியம்மன் கோவில் படிபூஜை: 18 கிராம மக்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2021 04:05
கரூர்: கரூர் மாவட்டம், புன்னம் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி கடந்த, 18ல் நடந்தது. நேற்று முன்தினம் புன்னம் பசுபதிபாளையம் பகுதியில் வீடு, வீடாக சென்று படி விளையாட்டு பூஜை நடந்தது. இதில், அம்மனை அலங்கரித்து வீடு வீடாக எடுத்து செல்வர். அங்கு பக்தர்களின் வீட்டு வாசல்களில் பூஜை செய்து சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இதே போல, 18 கிராமங்களில் உள்ள ஒவ்வொரு பக்தர்கள் வீடுகளிலும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. மே 2ல் பொங்கல் வைத்து, வடிசோறு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து மே, 3ல் கோவிலில் இருந்து புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் பக்தர்களால் எடுத்து வரப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. மே, 4ல் அபிஷேகம், மாவிளக்கு, கிடாவெட்டு, சிறப்பு பூஜை மற்றும் தேரோட்டம் நடக்கிறது.