திருவாடானை : திருவாடானை கோயில்களில் சஷ்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன், ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது.