கோவை : ஈஷா யோகா நிறுவனர் சத்குரு, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், மக்களின் ஆதரவுடன் அரசமைக்கும் ஸ்டாலினுக்கும், தி.மு.க.,வுக்கும் வாழ்த்துக்கள். தற்போதைய சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ளவும், தமிழ் பாரம்பரியத்தின் வளத்தை மீட்டெடுக்கவும், புதிய நிர்வாகத்திற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். நல்வாழ்த்துகள் என்று சத்குரு குறிப்பிட்டுள்ளார்.