கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
முருகனின் அறுபடை வீட்டுக்கும் தனித்தனி கந்தசஷ்டி கவசம் உள்ளது. ஆறாம் படைவீடான சோலைமலை கவசத்தை படியங்கள். சங்கரன் மகனே சரவண பவனேஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனேசெங்கன்மால் மருமகனே தெய்வானை கேள்வனேபங்கயம் போன்ற பன்னிரு கண்ணனேபழநிமா மலையுறும் பன்னிரு கரத்தனேஅழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்சரவண பவனே சட்கோணத் துள்ளுரைஅரனருள்சு தனே அய்யனே சரணம்சயிலொளி பவனே சடாட்சரத் தோனேமயில்வா கனனே வள்ளலே சரணம்திரிபுர பவனே தேவசே னாபதிகுறமகள் மகிழும் குமரனே சரணம்திகழொளி பவனே சேவற் கொடியாய்நகமா யுதமுடை நாதனே சரணம்பரிபுர பவனே பன்னிரு கையனேதருணமிவ் வேளை தற்காத் தருளேசவ்வும் ரவ்வுமாய் தானே யாகிவவ்வும் ணவ்வுமாய் விளங்கிய குகனேபவ்வும் வவ்வுமாய் பழமுதிர் சோலையில்தவ்வியே ஆடும் சரவண பவனேகுஞ்சரி வள்ளியைக் குலாவி மகிழ்வோய்தஞ்சமென் றுன்னைச் சரணம் அடைந்தேன்கொஞ்சிய உமையுடன் குழவியாய்ச் சென்றங்(கு)அஞ்சலி செய்வதன் அமுதமும் உண்டுகார்த்திகை மாதர் கனமார்(பு) அமுதமும்பூர்த்தியாய் உண்ட புனிதனே குகனேநவமைந்தர் சிவனால் நலமுடன் உதிக்கத்தவமுடை வீர வாகுவோ(டு) ஒன்பான்தம்பி மா ராகக் கொண்டசம்பிர தாயா சண்முகா வேலாநவவீரர் தம்முடன் நவகோடி வீரரும்கவனமாய் உருத்திரன் அளித்தே களித்துப்பேதம் இல்லாமல் பிரமனைக் குருவாய்ஓதிடச் செய்ய உடன் அவ் வேதனைஓமெனும் பிரணவத் துண்மைநீ கேட்கத்தாமே யோசித்த சதுர்முகன் தன்னைஅமரர்கள் எல்லாம் அதிசயப் படவேமமதைசேர் அயனை வன்சிறை யிட்டாய்விமலனும் கேட்டு வேகம தாகஉமையுடன் வந்தினி துவந்து புரிந்துஅயனைச் சிறைவிடென்(று) அன்பாய் உரைக்கநயமுடன் விடுத்த ஞானபண் டிதனேதிருமால் அயன்சிவன் சேர்ந்து மூவரும்கௌரி லக்ஷ்மி கலைமக ளுடனேஅறுவரோர் அம்சமாய் அரக்கரை வெல்லஆறு முகத்துடன் அவதரித்தோனேசிங்க முகாசுரன் சேர்ந்த கயமுகன்பங்கமே செய்யும் பானு கோபனும்சூரனோ டொத்த துட்டர்க ளோடுகோரமே செய்யும் கொடியராக் கதரைவேருடன் கெல்லி விண்ணவர் துன்பம்ஆறிடச் செய்த வமரர்கள் தமக்குச்சேனா பதியாய் தெய்வீகப் பட்டமும்தானாய்ப் பெற்ற தாட்டிகப் பெருமானேதிருப்பரங் குன்றம் செந்தூர் முதலாய்ச்சிறப்புறு பழநி திருவே ரகமுதல்எண்ணிலாத தலங்களில் இருந்தாடும் குகனேவிண்ணவர் ஏத்தும் விநோத பாதனேஅன்பர்கள் துன்பம் அகற்றியாள் பவனேதஞ்சமென்(று) ஓதினர் சமயம் அறிந்தங்(கு)இன்பம் கொடுக்கும் ஏழைபங் காளாகும்பமா முனிக்குக் குருதே சிகனேதேன்பொழில் பழநித் தேவ குமாராகாண்பார்த்(து) எனையாள் கார்த்திகே யாஎன்கஷ்டநிஷ் டூரம் கவலைகள் மாற்றிஅஷ்டலக்ஷ்மி வாழ் அருளெனக்(கு) உதவிஇட்டமாய் என்முன் னிருந்து விளையாடத்திட்டமாய் எனக்கருள் செய்வாய் குகனேஅருணகிரி தனக்(கு) அருளியதமிழ்போல்கருணையால் எனக்கு கடாட்சித் தருள்வாய்தேவராயன் செப்பிய கவசம்பூவல யத்தோர் புகழ்ந்து கொண்டாடசஷ்டிக் கவசம் தான்செபிப் போரைச்சிஷ்டராய்க் காத்தருள் சிவகிரி வேலாவந்தென் நாவில் மகிழ்வுடன் இருந்துசந்தத் தமிழ்த்திறம் தந்தருள் வோனேசரணம் சரணம் சரவண பவஓம்சரணம் சரணம் தமிழ்தரும் அரனேசரணம் சரணம் சங்கரன் சுதனேசரணம் சரணம் சண்முகா சரணம்.