மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டம் பாடேஸ் கிராமத்தில் பாதேஸ்வர் மகாதேவ் என்னும் சிவன் கோயில் உள்ளது. 16ம் நுாற்றாண்டில் உருவான இக்கோயிலில் 8 பெரிய குகைகளும், பல சிறிய குகைகளும், 1000 சிவலிங்கங்களும் உள்ளன. சிற்ப வேலைப்பாடு மிக்க இங்கு அதிசய நந்தி ஒன்று உள்ளது. முன்புறம் மனிதனைப் போலவும், பின்புறம் நந்தி போலவும் காட்சியளிக்கிறது. பக்கவாட்டில் பார்த்தால் அதன் முன்னங்கால்கள் மனிதன், நந்தி இரண்டுக்கும் பொருந்துவது போல இருக்கிறது. வலது புறம் நான்கு கைகளும், இடது புறம் மூன்று கைகளுமாக இந்த நந்திக்கு ஏழு கைகள் உள்ளன.