Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பயம் போக்கும் பரங்கிப்பேட்டை ... அமாவாசை அபிஷேகம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காட்மாண்டு பசுபதிநாதர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2021
08:05


நெற்றிக்கண்ணுடன் சிவனுக்கு மூன்று கண்கள் இருப்பது நமக்குத் தெரியும். ஆனால் அவர் ஐந்து முகங்கள் கொண்டவர் என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா... இந்த சிவனைத் தரிசிக்க நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டில் உள்ள பசுபதிநாதர் கோயிலுக்குச் செல்வோம்.
 பசுக்கள் என்றால் உயிர்கள். இந்த உயிர்களைப் படைத்து, காத்து, அழிக்கும் எஜமானராக இருப்பவர் சிவன். இதனால் அவருக்கு ‘பசுபதி’ என்று பெயருண்டு. திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களுடன், மேல் நோக்கிய ஒரு முகத்தையும் சேர்த்து ஐந்துமுகம் கொண்ட சிவன், உலக இயக்கம் அனைத்தையும் கவனமாகப் பார்க்கிறார். அவரது பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது. பசுபதி நாதர் என்னும் சிவனுக்கு, நேபாளத்தின் லிச்சாவி வம்சாவளியைச் சேர்ந்த மன்னர் சுபஸ்பதேவர் என்பவர் கி.பி. 464ல் கட்டினார். பகோடா கட்டிடக்கலையால் ஆன இக்கோயில் கனசதுர வடிவம் கொண்டது. கோயில் முழுவதும் தாமிர மேற்கூரையுடன் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. நான்கு முதன்மை வாயில்களும் வெள்ளியால் ஆனவை. மூலவர் பசுபதிநாதர் ஆறடி உயரம், ஆறடி சுற்றளவு கொண்ட கருங்கல்லால் ஆனவர்.
சிவனின் நான்கு முகங்களுக்கு எதிரேயும் தனித்தனியாக நான்கு கதவுகள் கொண்ட நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றின் அருகிலும் பண்டாக்கள் எனப்படும் பூஜாரிகள் இருக்கின்றனர். கோயில் எங்கும் பக்தர்கள் அமர்ந்து ருத்ர ஜபம் செய்கின்றனர். சிவன் எதிரில் பித்தளையால் செய்யப்பட்ட பெரிய நந்தி சிலை உள்ளது.
 பசுபதிநாதர் கோயிலின் இடப்புறம் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவற்றை சுற்றி வருவதற்கு தனிப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் பின்புறம் பாசுமதி நதி ஓடுகிறது. இதில் நீராட படித்துறைகள் உள்ளன. அதில் ஆர்ய காட் படித்துறையில் இறந்தவர்களின் உடலை தீயிட்டு எரித்து அஸ்தியை ஆற்றில் கரைக்கின்றனர். கங்கை கரையில் உள்ள மணிகர்ணிகா கட்டம் போல முன்னோர் சடங்குகள் இங்கு நடக்கிறது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களில் இக்கோயிலும் ஒன்று.    
பசுபதிநாதர் கோயிலுக்கு அருகில்  புத்தநீலகண்ட் என்னும் மகாவிஷ்ணு கோயில் உள்ளது. ஆதிசேஷன் மீது சங்கு சக்கரத்துடன் சயனக் கோலத்தில் இருக்கிறார்.  விவசாயி ஒருவரின் கனவில் மகாவிஷ்ணு தோன்றி  சிலைவடிவில் புதைந்து கிடப்பதாகவும், அதை பிரதிஷ்டை செய்யவும் உத்தரவிட்டதால் இக்கோயில் கட்டப்பட்டது.  
எப்படி செல்வது
காட்மாண்டுவுக்கு பெங்களூர், டில்லியிலிருந்து விமானம் உள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar