படை வீட்டம்மன் கோவில் தேர் சீரமைக்கும் பணிகள் தீவிரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2012 10:06
பண்ருட்டி: பண்ருட்டி படைவீட்டம்மன்கோவில் திருத்தேர் வெள்ளோட்டம் விடுவதற்காக பணி தீவிரமாக நடந்து வருகிறது.பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் செடல் உற்சவம் ஆடி மாதம் வெள்ளிக் கிழமை நடக்கும். 50 ஆண்டுகால பழமைவாய்ந்த திருத்தேர் மழை, வெயிலில் நனைந்து பாகங்கள் வீணானதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருத்தேர் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 2009ம் ஆண்டு திருத்தேர் புதுப்பிக்க அறநிலையத் துறை சார்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்து 5 லட்சமும், உபயதாரர்கள் மூலம் 10 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்தனர். தேர் பணியை துவக்கிய போது ஏற்கனவே இருந்த தேர்பாகங்கள் முற்றிலும் அரித்து வீணானது. இதனால் புதிய திருத்தேர் 35 லட்சம் மதிப்பீட்டில் செய்ய முடிவு செய்து 3 ஆண்டுகளாக அரசு மற்றும் உபயதாரர்கள் உதவியுடன் இலுப்ப மரத்தின் மூலம் ஒவ்வொரு பாகங்கள் ஒப்பந்தாரர் ராஜாமணி ஸ்தபதி தலைமையில் தொழிலாளர்கள் தேர்பகுதியில் சுவாமியின் பாகங்கள் வடிவமைத்தனர். தற்போது தேர் பாகங்கள் ஒவ்வொன்றும் பொருத்தி தேரை பூட்டும் பணி யில் தொழிலாளர்கள் சில வாரங்களாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவில் பரம்பரை தர்மகர்த்தா ஜலந்திரன் கூறுகையில், வரும் ஆவணி மாதம் 2ம் வெள்ளிக்கிழமை கோவில் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குள் திருத்தேர் பணியை முடித்து வெள்ளோட்டம் விட ஏற்பாடு செய்துள்ளோம். அன்று நடக்கும் செடல் உற்சவத்தில் திருத்தேர் புறப்பாடு நடக்கும் என்றார்.