பதிவு செய்த நாள்
12
மே
2021
04:05
கோவை:கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, வீடு தேடிசென்று உணவு வழங்குகிறது, ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களால் வெளியே எங்கும் போக முடியாத நிலை நீடிக்கிறது. இச்சூழலில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மொபைல் போன், வாயிலாக தகவல் தெரிவித்தால், அவர்கள் இருப்பிடம் தேடி அவர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு, இரு வேளைக்கான உணவு வீடு தேடி சென்று, ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 9345225024, 8608936720, 9443898987, 9443159614, 9842235514; திருப்பூரை சேர்ந்தவர்கள், 9367144955, 9487515709, 9443242956; நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 9843085424, 9787821306, 9159061230, 9750677000 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.