பதிவு செய்த நாள்
14
மே
2021
10:05
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.அதனையொட்டி, மூலவர் வள்ளி தேவசேனா சமேதராய சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் சுவாமி கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார்.
புதுச்சத்திரம்பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் கிருத்திகையையொட்டி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இரவு 9.00 மணிக்கு பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, திருத்தேரில் கோவிலைச் சுற்றி வலம் வந்தது. 10.00 மணிக்கு பாலமுருகன், விநாயகர், அம்மன் சுவாமிகள் ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடந்தது. தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.