குடும்பம், உறவினர், நண்பர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு. அதை பெரிதுபடுத்தாமல் அன்பால் பிறரை மன்னிக்க வேண்டும். ஏனெனில், ‘‘பகைவரிடம் அன்பு கூருங்கள். உங்களை வெறுப்போருக்கும் நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கும் ஆசி கூறுங்கள். உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக ஆண்டவரிடம் வேண்டுங்கள். ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திரும்பிக் காட்டுங்கள்.’’ என்கிறது பைபிள். சில நேரத்தில் எந்த காரணமும் இன்றி சிலர் நம்மை கோபமூட்டுவர். அப்போது நீங்கள் கோபத்தை வெளிக்காட்டாதீர்கள். பிறர் நம்மை இகழ்ந்து பேசலாம். மற்றவர்களிடம் அசிங்கப்பட்டு தலைகுனியும் நிலை கூட வரலாம். அப்போதும் அன்பு என்னும் ஒளியை அணைய விடாதீர்கள். பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறோமோ, அதையே நாமும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். நம் மீது அன்பு செலுத்துவோரிடம் அன்பு காட்டுவதில் பெருமை என்ன இருக்கிறது? பகைவரிடமும் அன்பு செலுத்துவதே சிறந்த பண்பு.