பதிவு செய்த நாள்
15
ஜூன்
2012
10:06
சின்னசேலம்: மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இதன் தேர் பவனியை கடந்த 5ம் தேதி பீட்டர் அபிர் கொடியேற்றி துவக்கி வைத்தார். நாள்தோறும் திருப்பலி பூஜைகள், தேவனை பற்றிய பாடல்கள், சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்கடந்த 12ம் தேதி இரவு 10 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும், 11 மணிக்கு பொருத்தனை தேர்பவனியும் நடந்தது. சிவகங்கை மறை மாவட்டம் ஆயர் சூசைமாணிக்கம், பங்கு தந்தைகள் புதுச்சேரி மைக்கேல்ஜான், சந்தவாசல் லாசர்சவரிமுத்து, புதுச்சேரி-கடலூர் உயர்மறை மாவட்ட முதன்மை குரு அருளானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த பெரு விழா திருப்பலி நிகழ்ச்சியை கடலூர்-புதுச்சேரி உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் அந்தோணி ஆனந்தராயர் துவக்கி வைத்தார். இரவு 11.30 மணிக்கு வாணவேடிக்கையுடன் சின்ன தேர்பவனி மற்றும் பெரிய தேர்பவனி நிகழ்ச்சி நடந்விழுப்புரம் முதன்மை குரு பிலோமின்தாஸ், திருக்கனூர்பட்டி பங்குதந்தை ஞானபிரகாசம், புதுச்சேரி ஆல்பர்ட் தம்பிதுரை, கும்பகோணம் மறைமாவட்ட பொருளாளர் சகாய ராஜ், ஆயர் சிங்கராயர், அந்தோணிசாமி, லூக்காஸ் தும்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேல்நாரியப்பனூர் திருத்தல பங்கு தந்தை ரட்சகர் நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பலி பூஜை செய்து, கொடியிறக்கம் செய்து வைத்தார்.