வேலாயதம்பாளையம்: வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சேங்கல் மலை வரதராஜ பெருமாள் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தங்க ஆபரணம், பணம் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மக்களின் பொருளாதார நிலை, செல்வம் உயர வேண்டி பால், இளநீர், பன்னீர், சந்தனம் ஆகியவற்றின் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மஹா தீபாராதனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.