சென்னை: பேரம்பாக்கம் நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் கருட சேவை நேற்று நடந்தது. நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் ஆனி பிரமோற்சவ விழா, மூன்றாம் நாளான நேற்று காலை 6 மணிக்கு கருட சேவை நடந்தது. கோபுர தரிசனத்தைக் காண கோவில் முன்பு, திரளான பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து, உற்சவர் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏழாம் நாளான, 19ம் தேதி காலை 5 மணிக்கு தேர்த்திருவிழாவும், 21ம் தேதி காலை 10 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.