Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேவகோட்டை கோயில்களில் அட்சய ... உலக நன்மைக்காக ஒரு கோடி ராம நாம ஜபம் பக்தர்களுக்கு அழைப்பு உலக நன்மைக்காக ஒரு கோடி ராம நாம ஜபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் இன்றி நடந்து முடிந்த கெங்கையம்மன் சிரசு திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பக்தர்கள் இன்றி நடந்து முடிந்த கெங்கையம்மன் சிரசு திருவிழா

பதிவு செய்த நாள்

16 மே
2021
12:05

குடியாத்தம்: குடியாத்தம், கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா பக்தர்கள் இன்றி நடந்தது. ஆண்டுதோறும் வேலுார் மாவட்டம், குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் நடக்கும்  சிரசு திருவிழாவில், ஐந்து லட்சம் பக்தர்கள் பங்கேற்பர்.


கொரோனா ஊரடங்கால், கடந்தாண்டு கெங்கையம்மன் சிரசு திருவிழா பக்தர்கள் இன்றி நடந்தது. தற்போது இரண்டாவது கொரோனா அலை பரவி வருகிறது. இதனால், இந்தாண்டும் விழா நடந்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து பக்தர்கள் இன்றி கோவிலுக்குள், அம்மன் சிரசு திருவிழா நேற்று நடந்தது. நள்ளிரவு, 1:00 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட அம்மன் சிரசு, கோவிலுக்குள்ளேயே வலம் வந்தது. தொடர்ந்து சண்டாளச்சி அம்மன் உடலில் கெங்கையம்மன் சிரசு பொருத்தப்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு சண்டாளச்சி அம்மன் உடலிலிருந்து, அம்மன் சிரசு பிரிக்கப்பட்டு மீண்டும் கோவிலுக்குள் வைக்கப்பட்டது. இந்த விழா ஒன்றரை மணி நேரத்தில் நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்ய தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar