கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா இன்று (16ம்தேதி) கொடியேற்றம் இன்றி துவங்குகிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாகத்திருவிழா நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி விசாக பெருந்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. முதல் முறையாக கொடியேற்றம் இல்லாமல் திருவிழா தொடங்குகிறது. திருவிழாவையொட்டி இரவு வாகன பவனி நடக்காது. திருவிழா 9வது நாள் நடக்கும் தேரோட்டம், 10ம் திருவிழா அன்று நடக்கும் தெப்பத் திருவிழா, முக்கடல் சங்கமத்தில் நடக்கும் ஆராட்டு நிகழ்ச்சிகள் நடைபெறாது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 25ம் தேதி வரை 10 நாட்களும் அதிகாலை 5 மணிக்கும், காலை 10 மணிக்கும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மேலும் விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் எதிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என்று திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.