மக்கள் இயல்பு நிலை அடைய சிறுவர்கள் நடத்திய திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2021 04:05
திருக்குறுங்குடி: திருக்குறுங்குடியில் கொரோனா ஒழிய வேண்டி, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சிறுவர்கள் 11நாள் திருவிழா நடத்தினர். நேற்று கடைசி நாள் திருவிழாவில் தீர்த்தவாரி நடந்தது.
திருக்குறுங்குடி சுற்று வட்டாரப்பகுதிகளில் சில நாள்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கைக்கை அதிகரித்துள்ளது. இந் நிலையில் திருக்குறுங்குடி சன்னதி தெருவைச் சேர்ந்த சிறுவர்கள் கொரோனா ஒழிந்திட வேண்டி அழகிய நம்பிராயர் பெர் பெருமாள், திருமலை நம்பி பெருமாளை மனதில் நினைத்து கோயிலில் நடைபெறுவதைப்போல ,கடந்த 5ம் தேதியிலிருந்து நேற்று வரை 11 நாள் திருவிழா நடத்தினர். நாள்தோறும் காலை, மாலையில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவிழா நாள்களில் சிறுவர்கள் தோளில் சுமந் தபடி சிறிய வாகனங்களில், பெருமாள் மாட வீதிகளில் வலம் வந்தார் . திருவிழாவின் 10ம் நாளான நேற்று முன் தினம் காலை தேரோட்டம் நடந்தது .மரத்தால் செய்யப்பட்ட சிறிய வடிவிலான தேரில் பெருமாள் எழுந்தருளி , மாட வீதிகளை சுற்றி வலம் வந்தார் . 11- வ து நாள் திருவிழாவில் நேற்று காலை காலை தீர்த்தவாரி நடந்தது . கொரோனா ஒழிய வேண்டி, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சிறுவர்களாக ஒன்று சேர்ந்து நடத்திய திருவிழாவை ,பெரியவர்கள் பாராட்டினர் .