பதிவு செய்த நாள்
16
மே
2021
05:05
சென்னை:கோவில்களின் நிர்வாகத்தை செம்மைப்படுத்தவும், வருமானத்தை பெருக்கும் வகையிலும், ஐந்து அம்ச செயல் திட்டத்தை, புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ள குமரகுருபரன் அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக, ஹிந்து அறநிலையத் துறையின், இணை, துணை, உதவி கமிஷனர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அறநிலையத் துறையின் மேம்பாட்டிற்கு, ஐந்து அம்ச செயல் திட்டம் கொண்டு வரப்படுகிறது. அத்திட்டம் வாரம்தோறும் கண்காணிக்கப்படும்.l அறநிலையத் துறை நிர்வாகம், ஆன்லைன் மயமாக்கப்படும்
* கோவில்கள் தொடர்பான மரபு சார்ந்த ஆவணங்கள், டிஜிட்டல் வடிவமாக்கப்படும்
* இணையதள உதவி யுடன், கோவில் நிலங்களை பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்படும்
* கோவில் நிலங்களுக்கு அடையாள தலைப்பு வைக்கப்படும்
* கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதோடு இல்லாமல், அந்த நிலங்களில் வருவாயை பெருக்க திட்டமிடப்படும்.
இந்த ஐந்து அம்ச செயல்பாடுகளும், கோவில்களின் வருமானத்தை பெருக்குதலுக்கான சிறந்த மேலாண்மை திட்டங்கள் தான். இந்த காலகட்டத்தில், இவை மிக முக்கியமானவை. எனவே, அனைத்து அலுவலர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இதன் வாயிலாக, அடுத்து வரும் நாட்களில், சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியும்.
மேலும், இது தொடர்பான வழிமுறைகள், அவ்வப்போது தலைமையகம் வாயிலாக வழங்கப் படும்.ஏற்கனவே கொடுக்கப்பட்ட வழிமுறைகளை, அலுவலர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அதை மேற்கொள்ள விரைவில், சாப்ட்வேர் ஒன்று செயல்படுத்தப்படும். அது, ஐந்து அம்ச செயல் திட்டத்தை நிறைவேற்ற ஏதுவாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.