விதிமுறையை மீறி நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்ற முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா மீது நடவடிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2021 04:05
மைசூரு-விதிமுறையை மீறி நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்ற முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா மீது நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் வலியுறுத்தியது. இதையடுத்து, விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு அமலில் உள்ளதால், கோவில்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா, கடந்த, 18ல் குடும்பத்துடன் மைசூரு நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.கபிலா ஆற்றங்கரையில், சிறப்பு பூஜைகள், ஹோமம் செய்தனர். பூட்டியிருந்த கோவிலை திறக்க வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அரசியல்வாதிகளுக்கு விதிமுறைகள் பொருந்தாதா; இவர்களுக்கு ஒரு நியாயம், பொது மக்களுக்கு ஒரு நியாயமா என கேள்வி எழுந்தது.இந்நிலையில் விஜயேந்திரா, தொற்று நோய்கள் கட்டுப்பாட்டு சட்டம் -- 2020 சட்டத்துக்கு புறம்பாக விஜயேந்திரா நடந்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒத்துழைத்த அதிகாரிகள், கோவில் அர்ச்சகர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மைசூரு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவகுமார், மைசூரு மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்துாரியிடம் புகார் செய்தார்.விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மைசூரு மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கு உத்தரவிட்டுள்ளார்.