பதிவு செய்த நாள்
16
ஜூன்
2012
11:06
பழநி: பழநி - கொழுமம் ரோடு குதிரையாறு ஆற்றுப்பாலத்தில் சுவாமி சிலைகள், படங்கள், பரிவார தெய்வங்கள் கிடந்தன. குதிரையாற்று பாலத்தில் சிலைகள் கிடந்தது குறித்து ஆர்.ஐ., சலீம் ரோஜா, கொமரலிங்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆற்றில் வீசப்பட்டிருந்த 4 அடி உயர பெரிய சிவலிங்கம் உட்பட 21 லிங்கங்களையும், 4 அடி உயர அம்மன் சிலை, தட்சிணாமூர்த்தி, முருகன், விநாயகர், ஐயப்பன் சிலை உட்பட 25 சிலைகள் மற்றும் சித்தர்கள் உட்பட 26 வரைபடங்கள், நந்தி, சிம்ம வாகனங்கள். பீடங்கள். சுவாமிகளுக்கு அணிவித்து வந்த ஆபாரணங்களை (கவரிங்) கைப்பற்றி கொமரலிங்கம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிலைகள் அனைத்தும் கற்களால் வடிக்கப்பட்டவை.வந்தது எப்படி: பாப்பம்பட்டி அருகேயுள்ள ஐவர்மலையைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்திருந்த சுவாமிசிலைகள் இவை எனவும், பராமரிக்க முடியாமல் ஆற்றில் வீசியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.