குடந்தை ஜெகநாதபெருமாள் கோவிலில் வைகாசி பிரமோத்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2021 01:05
தஞ்சாவூர், கும்பகோணம் அருகே நாதன்கோவிலில் உள்ள ஜெகநாதபெருமாள் கோவிலில் வைகாசி பிரமோத்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் 40ல் நடுநாயகமாகத் திகழ்வது நந்திபுர விண்ணகரம் என்னும் நாதன்கோவில் சேத்திரமாகும்.
சிறப்பு வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பிரமோத்சவம் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். அதன்படி இவ்விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பெருமாள் தாயாரோடு சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். பின்னர் மங்கள வாத்தியம் முழங்க கருட கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் ஜூன் 3- ம் தேதி வரை, விழா நாட்கள் பெருமாள் தாயாரோடு உள்பிரகார புறப்பாடு நடைபெறுகிறது. குறிப்பாக, 30-ம்தேதி மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 2 -ம் தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், பிரம்மோத்சவத்தின் இறுதி நாளான 3- ம் தேதி மாலை 6 மணிக்கு புஷ்ப யாக நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பிரம்மோத்சவத்தை முன்னிட்டு 10 நாட்களும் சுவாமி உள்பிரகார புறப்பாடு நிகழ்ச்சியும், திருமஞ்சனமும், நாலாயிர திவ்ய பிரபந்தசேவை நிகழ்சியும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஜெகந்நாதப் பெருமாள் கைங்கார்ய சபா மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.