அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2021 05:05
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், அந்திலி, லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர் அடுத்த அந்திலியில் உள்ள பழமையான லட்சுமி நரசிம்மர் கோவிலில், நேற்று சுவாதியை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு லட்சுமி நரசிம்மர் ஹோமம், 10:00, பூர்ணாகுதி, மகா திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் யாரும் இன்றி கோவில் குருக்கள் மட்டுமே பங்கேற்றனர். மாலை அர்ச்சனை தீபாராதனை நடந்தது.