வைகாசி விசாகம்: ராஜ அலங்காரத்தில் சுவாமிநாத சுவாமி அருள்பாலிப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2021 05:05
ராமநாதபுரம் : ராமநாதபுரம், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழா சிறப்பாக நடைபெற்றது. ராஜ அலங்காரத்தில் முருகர், வள்ளி, தெய்வானை அருள்பாலித்தனர். பட்டணம்காத்தான் வினைதீர்க்கும் வேலவர் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் முருகர்.வள்ளி, தெய்வானை அருள்பாலித்தனர். கொரோனா தொற்றால் ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்தது.