வைகாசியில் சந்திரன் முழு ஆற்றலுடன் பவுர்ணமியாக விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனால் இந்த மாதத்திற்கு ‘வைசாகம், வைகாசி’ என பெயர் வந்தது. இந்த பவுர்ணமி நன்னாளை ‘வைகாசி விசாகம்’ என்று கொண்டாடுகிறோம். முருகப்பெருமானின் அவதாரம் இந்நாளில் தான் நிகழ்ந்தது. விசாகத்தில் அவதரித்ததால் முருகனுக்கு ‘விசாகன்’ என்ற பெயரும் உண்டு. ‘வி’ என்றால் ‘பறவை’ (மயில்), ‘சாகன்’ என்றால் ‘சஞ்சரிப்பவன்’. ‘மயில் மீது வலம் வருபவர்’ என்பது பொருள். முருகனுக்கு மயில் வாகனமாக இருப்பது அசுரன் சூரபத்மனே. பகைவனுக்கும் அருள் புரியும் வள்ளலாக விளங்குபவர் முருகன் மட்டுமே. வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் எடுத்து முருகனுக்கு அபிேஷகம் செய்து வழிபடுவர்.