பதிவு செய்த நாள்
27
மே
2021
09:05
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஓலைச் சுவடிகளை ஆவணப்படுத்தும் பணி, நடந்து வருகிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது. பழமையான இந்த கோவிலின் தல வரலாறு, உற்சவங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள், ஓலைச் சுவடிகளில் தெலுங்கு மொழியில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, 100க்கும் மேற்பட்ட தலைப்புகளில் அமைந்த ஓலைச்சுவடிகள் அனைத்தும், கோவில் வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஸ்ரீரங்கம் கோவில் ஓலைச்சுவடிகள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.இது குறித்து, கோவில் இணை ஆணையர் மாரிமுத்து கூறியதாவது: பனை ஓலைகளில் எழுதி வைக்கப்பட்ட ஓலைச் சுவடிகள், இயற்கை சீற்றங்களால் அழிந்து போகாமல் இருக்க, ஹிந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள், பாதுகாப்பாக போட்டோ எடுக்கப்பட்டு, கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.