பதிவு செய்த நாள்
31
மே
2021
04:05
கோத்தகிரி: கோத்தகிரியில் சேவா பாரதி சார்பில், ஆயிரம் குடும்பங்களுக்கு, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். தொண்டு நிறுவனங்கள் உட்பட, பலர் உணவு பொருட்கள் வழங்கி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக, சேவா பாரதி அமைப்பு சார்பில், கோத்தகிரி முடித்திருத்துவோர் சங்கத்தினர், கோத்திமுக்கு மற்றும் அட்டடி ஆதிவாசி மக்கள் என, ஆயிரம் பேருக்கு தலா, 450 ரூபாய் மதிப்பிலான, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இதில், சேவா பாரதி கோத்தகிரி தாலூக நிர்வாகி ராஜேஷ் சந்தர் தலைமையில், கோவை மற்றும் நீலகிரி பொறுப்பாளர் மனோஜ், மாவட்ட பொறுப்பாளர் பூவராஜன் ஆகியோர் வழங்கினர். இதில், கோத்தகிரி நிர்வாகிகள் நேரு, ஹரிசுதன் மற்றும் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேவா பாரதி நிர்வாகிகள் கூறுகையில், கோத்தகிரி உட்பட, மாவட்டம் முழுவதும், ஐந்தாயிரம் ஏழை எளிய குடும்பங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்றனர்.