அஞ்சனாத்ரி ஆஞ்சனேயர் கோவில் உண்டியலில் ரூ.6 லட்சம் வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2021 02:06
கொப்பால்: வரலாற்று பிரசித்தி பெற்ற அஞ்சனாத்ரி ஆஞ்சனேயர் கோவில் உண்டியலில் ஆறு லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. கொப்பல் கங்காவதி அஞ்சனாத்ரி மலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோவில் அமைந்துள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கோவிலின் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். நடப்பாண்டு மார்ச் 18ல் உண்டியல் திறக்கப்பட்டது. அப்போது 15 லட்சத்து 42 ஆயிரத்து 204 ரூபாய் வசூலாகியிருந்தது. கொரோனா பீதியால், கோவில் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு எப்போது முடியும் என்பது தெரியவில்லை. கோவில் உண்டியல், கங்காவதி தாசில்தார் நாகராஜ் தலைமையில், கண்காணிப்பு கேமரா பாதுகாப்பில், நேற்று காலை திறந்து எண்ணப்பட்டது. உண்டியலில் மொத்தம் 6 லட்சத்து 37 ஆயிரத்து 458 ரூபாய் வசூலானது. நேபாள நாட்டின் பணமும் இருந்தன. ஆஞ்சனேயர் பிறந்த அஞ்சனாத்ரி மலையில், அடிப்படை வசதிகள் ஏற்படுத்த, கர்நாடக அரசு திட்டம் வகுத்துள்ளது. ஊரடங்கு இருப்பதால், பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.