* நேர்மையானவர்களுக்கு இருட்டிலும் வெளிச்சம் உதிக்கும். * நல்ல குணம் கொண்டவர்களால் சுற்றத்தினர் மட்டுமல்ல, இந்த பூமியும் பாக்கியத்தை சேர்த்துக் கொள்கிறது. * இன்பத்தை விட துன்பம் சிறந்தது. வெளியே இருக்கும் துன்பம் உள்ளே இருக்கும் இதயத்தை வலிமையாக்குகிறது. * முட்டாள் எந்த பிரச்னையிலாவது தலையிட்டுக் கொண்டே இருப்பான். புத்திசாலி விலகியே இருப்பான். * முதல்வனாய் இருக்க விரும்புபவன், தொண்டனாக இருக்க வேண்டும். * நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விட மாட்டான். * மவுனமாயிருந்தால் முட்டாள்கள் கூட அறிவாளியாய் மதிக்கப்படுவார்கள். * புற்றை உடைப்பவர் பாம்பால் கடிபடுவது போல, பிறருக்காக படுகுழி தோண்டுபர் அந்தக் குழிக்குள் விழுவார். * நல்ல மரத்தில் கெட்ட கனிகளையும், கெட்ட மரத்தில் நல்ல கனிகளையும் எதிர்பார்ப்பது மூடத்தனமானது. * வாக்குவாதம் வேண்டாம். அதனால் கேட்பவர்களின் புத்தி தடுமாறுமே ஒழிய பலன் ஏதுமில்லை. – பொன்மொழிகள்