வைத்தியநாதபுரம் அம்மன் கோயிலில் 4வது முறையாக கொள்ளை முயற்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2021 04:06
நாகர்கோவில்: கோட்டார் பகுதியில் கோயில் பூட்டை உடைத்து நான்காவது முறையாக நடந்த கொள்ளை முயற்சியால் பக்தர்கள் அதிர்ச் சி அடைந்தனர். கோட்டாறு வைத்தியநாதபுரத்தில் முத்தாரம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று அதிகாலை மர்ம ஆசாமிகள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் மின் இணைப்பை துண்டித்து விட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் கோயில் கருவறையின் பூட்டை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதனால்கோயிலில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை தப்பியது. ஏற்கனவே இந்த கோயிலில் மூன்று முறை கொள்ளை முயற்சி நட ந்துள்ளது. இது தொடர்பாக கோட்டாறு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.